சென்னை ஓ. எம்.ஆர். காரப்பாக்கதில் அருள் மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய வளாகதில் அருள் மிகு கற்பகாம்பாள் சமேத – ஸ்ரீ கற்பக ஈஸ்வரர்க்கு 12 ஆம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா 14.03.17 முதல் 17.03.2017 வரை கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை ஓ. எம்.ஆர். காரப்பாக்கதில் அருள் மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய வளாகதில் அருள் மிகு கற்பகாம்பாள் சமேத – ஸ்ரீ கற்பக ஈஸ்வரர்க்கு 12 ஆம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா 14.03.17 முதல் 17.03.2017 வரை கோலாகலமாக நடைபெற்றது.
ஆன்மீக செம்மல் அறங்காவலர் மற்றும் அதிமுக சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் லியோ என். சுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்பாபிஷேக சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர். ஸ்ரீ பிரத்தியங்கிரா சுவாமிகள், திருவடிசூலம் ஸ்ரீ முத்து சுவாமிகள்,கே. வி.எஸ்.செல்வராஜ் குரு சுவாமிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜை நிகழ்ச்சிகளை ஸ்ரீ கங்கை அம்மன் பிரதான அர்ச்சகர் சிவஸ்ரீ ஏ. குருமூர்த்தி சிவாசாரியர் முறைப்படி பூஜைகளை துவக்கி வைத்து யாகங்கள் நிகழ்த்தினர். காலை முதலே கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலையில் மூன்றாவது கால யாக பூஜை தொடர்ந்து காலையில் நான்காவது கால யாக பூஜை, தீபாராதனை, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் ,கருவறை விமான மகா கும்பாபிஷேகம் ,மூவலர்களுக்கு மகா கும்பாபிஷேகம் ,மற்றும் அன்னதானம் இரவு ஸ்ரீ் கற்பகாம்பாள்- கற்பக ஈஸ்வரர் ஸ்ரீ ராமர் ஸ்ரீ லக்ஷ்மணன், ஸ்ரீ சீதா, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், திருவீதி உலா காட்சி போன்றவை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேகத்தில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்,மத்திய மாவட்ட செயலாளர் திருகளாகுன்ற ஐம் ஆறுமுகம்,தென் சென்னை நாடாள மன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர் தன் ,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே. பி.கந்தன்,மற்றும் காவல் துறை சார்பில் சென்னை கமிஷனர் எ.கே.விஸ்வநாதன், தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி,உதவி ஆணையர் லோகநாதன்,வட்ட செயலாளர் ஞனமூர்த்தி, மற்றும் ஊர் மக்கள்,கட்சி நிர்வாகிகளும், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.