10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 100 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 100 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா சென்னை சைதாப்பேட்டையில் மாவட்ட பிரதிநிதி சைதை த.சம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இந்த விழாவில் தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன் வட்டச் செயலாளர் நா.தமிழரசு சைதை ஆர்.ரவி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்