உலக வங்கியின் உதவியுடன் புதிய சுகாதார திட்டம் ஜூலை மாதம் முதல் தொடங்கவிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலக வங்கியும் தமிழக அரசும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்த நிகழ்வில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயலாஸ்கர், தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கி மேலாளர் ரேகா மேனன், தமிழக சுகாதர துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர்:

“தமிழ்நாடு அரசு உலக வங்கியின் நிதி உதவியுடன் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 1,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன், தொற்றுநோய் தடுப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை, பேறு கால அவசர சிகிச்சை, சுகாதார தகவல் மேலாண்மை உள்ளிட்ட வைகளை செயல்படுத்தி வந்துள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 2857.003 கோடி ரூபாய் மதிப்பில் உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும்

இந்த திட்டத்திற்கான உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,000 கோடி ரூபாய் என்றும், தமிழ்நாடு அரசு 857.1 கோடி கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது எனவும்

இந்த திட்டத்தினை செயல்படுத்த வேண்டிய நிதியினை கொடுக்க, மார்ச் மாதம் 19ம் தேதி அன்று உலக வங்கி ஒப்புதல் வழங்கியது என்றும், ‘நிலையான வளர்ச்சி’ என்ற குறிக்கோளுடன் ஐந்து வருடங்களுக்கு 5.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது என கூறிய அவர்

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிலையங்களில், உயர்தர மருத்துவ சேவைகளை இதன் மூலம் வழங்க முடியும் என்றும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, நோயின் தன்மையை கட்டுப்படுத்துவதற்கும், தொற்றா நோய்களை தடுப்பதற்கான செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கான உரிய மேல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும்

அரசு மருத்துவமனைகளில் உள்ள விபத்து காயம் சிகிச்சை மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் என்றும்

மேலும் ஜூலை மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறையின் தேவைக்கு ஏற்றார்போல் நிதி விடுவிக்கப்படும்” என்றும் விஜயபாஸ்கர் கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், 10 சதவீத பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து, தமிழக அரசு இதுவரை முடிவு செய்யவில்லை” என்றார்